ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அத்துமீறி நுழைய முற்பட்டமைக்காக குறித்த நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வாக்குமூலத்தை பெற்றதை அடுத்து பொலிஸ் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.