ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட குழுக்கள் மற்றும் சிறு கட்சிகளுடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷான் விஜயலால் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்த்தியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.