பூநகரி அபிவிருத்தி திட்டம் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பூநகரி, கிளிநொச்சி அல்லது வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு முதலீடுகளை செய்வதற்கும் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கும் தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பூநகரியை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் வெளி பிரதேசங்களில் உள்ள மக்கள் அங்கு வந்து மீள்குடியேறுவதற்கான உட்கட்டுமான வசதிகள் தேவை என்றபோதும் அது பற்றி எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 500 மில்லியன் ரூபாய் அவசர அவசரமாக ஒதுக்கபடபட்ட போதும் பூநகரி அபிவிருத்தி திட்டம் குறித்து அப்பகுதி மக்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரட்டிகமராக இருந்த போது மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி இடம்பெற்றது என்றும் இது பின்னர் மத்திய துறைமுக அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டதால் தொழில் செய்த நிலங்களை அந்த மக்கள் இழக்க வேண்டி ஏற்படாது என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.