2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலப்பதால், அது உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அது இந்த ஆண்டில் 1.3 டிகிரி செல்சியசிலிருந்து 1.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.