தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது.
குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அதற்கு பதிலாக குழாய் நீரை நிரப்பி வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே தொற்று ஏற்பட்டு குறித்த நோயாளிகள் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.