தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் கால அவகாசத்தினை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுமந்திரன் சிறிதரன், யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் யாப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் தங்களுக்குள் இணக்கப்பாட்டிற்கு வருவதன் அடிப்படையில் போட்டியின்றித் தலைவர் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து கட்சியின் யாப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.