இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் போலியான மெஹந்தி கோன்களை தயாரிக்கும் மெஹந்தி நிறுவனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டிணத்தில் மருதாணி இலைகளை பயன்படுத்தாது போலியான முறையில் தயாரிக்கப்படுவதாக தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி , குறித்த மெஹந்தி கோன்களில் Picramic acid கலக்கப்பட்டிருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதோடு, உரிமம் இல்லாமல் நிறுவனம் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்துவத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும்போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும். இது உடல் நலத்தை பாதிக்கும். போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.