இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு படகுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச நிதியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுள்ள விடயமானது, தற்போது நாட்டு மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டி, கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, ஆளும் தரப்பு பிரதம கொரடாவான பிரசன்ன ரணதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே சபையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பாக இன்று விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது சொந்த செலவிலேயே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட துறைமுகங்கள் மற்றும் கப்பற் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான பிரேமலால் ஜயசேகர, தனது சொந்த செலவிலேயே இதற்கான நிதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.