ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பரந்த மோதலைத் தூண்டக்கூடிய தீவிர முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளமைக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதேநேரம் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இந்த நடவடிக்கை உலகளாவிய பொருளாதார தாக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.