விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் போட்டித் தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு அமைச்சர் ஜெய் ஷாவிடம் இந்தக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியதன் மூலம் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என நம்பப்படுவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.