நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில்,பிரதான கடத்தல் காரர்களை கைது செய்து உண்மையான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிரதான நபர்களை கைது செய்ய வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை உரிய முறையில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.