மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று இலங்கை மின்சார சபை கையளித்துள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த பிரேரணையை கையளித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, மின் கட்டணங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க செயற்பட்டுவருவதாகவும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் நிச்சயமாக இந்த நன்மைகளைப் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில், குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் கணிசமான மழை பெய்து வருவதால், கட்டணக் குறைப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, 0-30, 0-60 மற்றும் 0-90 வரையான மின் அளகுகளை பயன்டுத்தும் மக்களுக்கே குறித்த நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த மேலும் தெரிவித்துள்ளார்.