வட் வரி உயர்வினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளன.
அதன்படி, பச்சை மிளகாயின் மொத்த விலை 900 ரூபாயாகவும் சில்லறை விலை 1,100 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைச் சீனியின் மொத்த விலை 265 ரூபாயாகவும் சில்லறை விலை 290 ரூபாய் முதல் 310 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நெத்திலியின் மொத்த விலை 1000 ரூபாயாகவும் மொத்த விலை 1100 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையும் பெரிய வெங்காயம் மொத்த விலை 400 ரூபாயாகவும் சில்லறை விலை 450 ரூபாய் முதல் 570 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயாகவும் சில்லறை விலை 180 ரூபா முதல் 210 ரூபா வரையும் உயர்வடைந்துள்ளது.
மைசூர் பருப்பின் மொத்த விலை 290 ரூபாயாகவும் சில்லறை விலை 300 ரூபாய் முதல் 360 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.