காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறும் இரண்டு இஸ்ரேலிய கைதிகளின் சடலங்களைக் காட்டும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதேநேரம் காசா மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பணய கைதிகள் மூவர் வலியுறுத்தும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.
கைதிகளாக இருந்த இரண்டு பேரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாக குறித்த பணயக் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் பணய கைதிகளை தமது படைகள் தாக்கவில்லை என்றும் இது ஹமாஸால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய் என்றும் இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது சுமார் 240 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து சென்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.