கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமான போதிய அளவு இடவசதி இல்லாமால் சிறைச்சாலைகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் வெளியான சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கையில், கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், சிறைக்கைதிகளுக்காக ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் சிறையில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.