பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகமான பார்ன்ஸ்லி அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் பெற்றுள்ளார்.
18 வயதான விமல் யோகநாதன் பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகத்தோடு இரண்டரை வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் ஆங்கில கால்பந்து தொடரில் இடம்பெற்ற முதல் தமிழ் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய தருணம் என்றும் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்த கடின உழைப்பின் பெறுபேறு என்றும் விமல் யோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.