பனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில் பனை தொடர்பான பொருட்களை தயாரித்து வாழும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடலை நடத்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஏற்பாடு செய்தார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டத்தை முதன்மையாகக் கொண்டு அண்மையில் (16) ஏற்பாடு செய்திருந்த நல்லிணக்க மேம்பாடு வேலைத்திட்டம் தொடர்பில் இது இடம்பெற்றது.