”பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென” வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் ‘கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தமை, அடிப்படை உரிமைகளை மீறியமை, போராட்டக்களத்தில் தாக்குதல் நடத்தியமை‘ உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.