கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸார் இன்று முதல் சி.சி.டி.வி. ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு நகரில் போக்குவரத்துவிதி மீறல்களை கண்டறிய, பொலிஸார் இன்று முதல் சி.சி.டி.வி. கமெரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
கொழும்பு நகரில், பொலிஸாரினால் கண்டறியப்படும் போக்குவரத்து விதிமீறல்களைவிட 300 மடங்கு அதிகமான விதிமீறல்கள் சி.சி.டி.வி. கமெரா ஊடாக கண்டறியப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தார்.
இதன் காரணத்தினாலேயே இன்று முதல் இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் 108 சி.சி.டி.வி. கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸாரின் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்களிலும் சிசிடிவி அமைப்பு செயற்பாட்டில் உள்ளதாக சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.