இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.
சில நிமிடங்களுக்கு முன், இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
சட்டமூலம் மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.