இந்திய பங்குச்சந்தை ஹொங்காங் பங்குச்சந்தையை பின் தள்ளி உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.
அதன்படி, உலக பங்குச்சந்தையில் இவ்வளவு உயரத்தை எட்டிய முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்குச் சந்தைகளின் ஒருங்கிணைந்த பட்டியலிடப்பட்ட மதிப்பு நேற்றைய (22) நாள் முடிவில் 4.33 டிரில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது, அதே சமயம் ஹொங்காங்கில் இது 4.29 டிரில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.