மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் முட்டை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சதொச கடைகளில் முட்டை தட்டுப்பாடு நிலவி வந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை 43 ரூபாவிற்கு விற்பனை செய்ய வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து மேல் மாகாணத்தில் முட்டை விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பல பகுதிகளில் முட்டைகள் கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.