ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற இராணுவ விமானமொன்று உக்ரேன் எல்லையில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 பணியாளர்கள் மற்றும் மூன்று காவலர்கள் உட்பட74 பேர் பயணித்த விமானமே தெற்கு பெல்கொரோட் பகுதியில் வைத்து இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானத்தில் 65 உக்ரேனிய போர் கைதிகள் இருந்துள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.