ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய எல்லைக்கு அருகில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகும். இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் நடத்தியிருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இதற்கு காரணமானவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.