இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று பீகாரை செல்லவுள்ளது.
ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட நிலையில் 2 ஆவது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி மணிப்பூரில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் கடந்த 25 திகதி மேற்கு வங்காளத்தை வந்தடைந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது.
பீகாரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் நேற்று பா.ஜ.க.வுடன் இணைந்து முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.