உத்தரபிரதேசத்தில் சுமார் 813 கீலோமீற்றர் தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதியினை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் மந்திரியோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்தியாவிலேயே அதிக தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதியை அமைக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் 813 கிலோமீற்றர் தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதி அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் அடிப்படையில் நாளாந்தம் 9 கிலேமீற்றர் தூரம் பிளாஸ்டிக் வீதி அமைக்கப்பட்டு வருகின்றது” இவ்வாறு மந்திரியோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.