இஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்” நேற்று பகலுடன் முடிந்த முந்தைய 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலினால் பாலஸ்தீனியர்கள் 165 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 290 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 422 ஆக உயர்ந்துள்ளதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 87 பேராக அதிகரித்துள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளில் ஒட்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் உயிருக்குப் போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.