சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை நால்வர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர் எனவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இந்த ஆண்டில் இதுவரை 9 ஆயிரத்து 483 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேல், மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தே அதிக டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுப்பது அவசியமாகும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.