காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் இதுவரை சுமார் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினி நகரத்தில் உள்ள இபின் சினா மருத்துவமனையினுள் இஸ்ரேலிய சிறப்புப் படை நடத்திய தாக்குதலில், மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டத் தகவல்களின்படி, இஸ்ரேலியப் படை மருத்துவமனையின் மூன்றாவது மாடியைத் தாக்கி, ஒலியை ஏற்படுத்தாத துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மூன்று பாலஸ்தீனியர்ள் மீது துப்பாக்கிசூட்டு நடத்தியதன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய படையினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவம் இபின் சினா மருத்துவமனையில் உள்ள கமராவில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.