ரோம் நகரில் சூரிய மின் சக்தி நிலையத்தை நிறுவும் நோக்கில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியை சேர்ந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 57 கல்லறைகளில் இருந்து 67 எலும்புகூடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எலும்புக்கூடுகள் மட்டுமன்றி விலையுயர்ந்த நகை பொருட்கள், காலணிகள், ஆடைகள், வெள்ளி மோதிரங்கள், மட்பாண்டங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண்டைய நகரமான ரோமுக்கு அருகே உள்ள டார்குனியாவில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் தோண்டப்பட்ட போது இவை கிடைத்தமை ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக முண்ணனி அகழ்வாராய்ச்சியாளர் Emanuele Giannini தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு சில எலும்புகூடுகளில் விலையுயர்ந்த காலணிகள் அணியப்பட்டவாறே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.