ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆடை தயாரிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் டன் செயற்கை சாயங்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்படடுள்ளது.
இவ்வாறு பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான தீர்வை ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன.
இவ்வகையில், இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று, உலகில் அதிக தேவையுடைய இயற்கை நிறமிகளின் பயன்பாட்டிற்கு சிறந்த தீர்வை வழங்க முன்வந்துள்ளது.
அதாவது, உலகில் முதன்முறையாக தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 200,000 டன்களுக்கும் அதிகமான செயற்கை சாயங்கள் உலகளவில் துணிகளுக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் சாயங்கள் தண்ணீருக்குள் சென்று சூரிய ஒளி படுவதால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நாட்டின் சுற்றாடல் பிரச்சினைக்கு நல்ல தீர்வை வழங்கும் வகையில் 14 சிரேஷ்ட விஞ்ஞானிகளையும் 80 ஆராய்ச்சி விஞ்ஞானிகளையும் கொண்ட இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகம் மேற்கொண்டுள்ள இந்த கண்டுபிடிப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.