சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் போன்றது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.