இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் பாதியில் ஆப்கானிஸ்தான் அணி 230 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிஸிற்காக விளையாடி வருகின்றது.
போட்டி ஆரம்பமாகி மூன்றாவது ஓவர் இடம்பெறும் பொது ரஹ்மத் ஷா 106 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அரைச்சம் கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்றுக்கொள்ளும் 3 ஆவது அரைச்சதமாக் பதிவாகியது.
இதனை தொடந்து இரண்டாவது விக்கெட்டு இணைப்பாட்டமாக 207 பந்துகளில் 100 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோது கசும் ராஜித வீசிய பந்தில் ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் இப்ராஹிம் சத்ரனின் நிதான துடுப்பாட்டத்தை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 230 ஓட்டங்களை பெற்றுள்ளது இதனால் இலங்கை அணியை விட 11 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
டெஸ்ட் போட்டியின் நேற்றய மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சிற்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை எடுத்திருந்தது.
நேற்றய நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்திருந்தது. இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ 35 ஓட்டங்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இத்தகு முன்னதாக முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்கு விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 439 ஓட்டங்களை குவித்தது.