சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியானது,இக் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,200 வீடுகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தீக்கிரையாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இக்காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில், குறித்த பகுதியில் வெப்பநிலையானது 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.