தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் எனவும், நூற்றுக் கணக்கானோர் காணாமற் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுத் தீயினால் இதுவரை 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இத் தீ பரவியுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள சுமார் 3000 க்கும் மேட்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு, அரியவகை மரங்களும், ஏராளமான விலங்குகளும் தீயினால் கருகியுள்ளன.
இதேவேளை குறித்த பகுதியில்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றபோதிலும் தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால், தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களிடம் அந்நாட்டு ஜனாதிபதி ‘ கேப்ரியல் போரிக்‘ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இக் காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.