பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே ஜனாதிபதியால் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்த முடியாது” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ் அபிவிருத்திக் குழுக் கூட்தத்தில் ”கடந்த ஆண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பரிவில் சுமார் 139 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.