நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2000 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய , நேற்றைய தினம் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விற்பனை விலை 1980 ரூபாயாக பதிவாகியிருந்ததோடு ,எந்த பொருளாதார நிலையத்திலும் முருங்கைக்காய் விற்பனையாகவில்லலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு மேல் பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கறி மிளகாய் 1,200 ரூபாய்க்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை , நேற்று (08) 650 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.