நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 553 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 152 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 143 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் , 134 கிராம் 578 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , 2 கிலோகிராம் 888 கிராம் கஞ்சா , 3 கிலோகிராம் 339 கிராம் மாவா , 928 கிராம் மதன மோதகம் , 255 போதைமாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














