”நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அரசாங்கம் எடுக்கும் சில தீர்மானங்கள் காரணமாக மக்கள் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடுகின்றது.
இவ்வருடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படலாம்.
எனவே முழுமையான செயற்திறன் ஆற்றல் விசேட முறைமைகளைப் பயன்படுத்தி எதிர்கால திட்டங்களை தயாரிக்க வேண்டும்” இவ்வாறு நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.