இயங்காத நிலையில் இருந்த இருநூறு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இப்பபேருந்துகளை சேவையிலீடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது .
இதேவேளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எண்ணூற்றி ஐம்பத்திரண்டு பேரூந்துகள் செயலிழந்திருந்தன, மேலும் நாடு முழுவதும் உள்ள 11 உள்ளூர் பணிநிலையங்கள் மற்றும் 107 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பேருந்துகளை திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் 2023 இல் 193 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட பேருந்து புனரமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 193 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.