இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மியன்மார் இராணுவ அரசாங்கம், சகல இளைஞர், யுவதிகளுக்கும் இராணுவ சேவையை கட்டாயமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும் என இராணுவ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் மியன்மார் இராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதுடன், அந்நாட்டின் ஜனநாயக தலைவியான Aung San Suu Kyi உள்ளிட்ட ஜனநாயகத் தலைவர்களை வீட்டுக்காவலிலும் சிறைகளிலும் அடைத்துள்ளது.
இந்நிலையில், போராளி அமைப்புக்கள் மற்றும் இராணுவ விரோத போராளிகளுடன் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற மோதல்களில் மியன்மார் இராணுவம் மோசமான தோல்வியை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கில், மியன்மார் இராணுவ அரசாங்கம், சகல இளைஞர், யுவதிகளுக்கும் இராணுவ சேவையை கட்டாயமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.