பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேலியகொட மீன் வர்த்தக வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார் .
இதன்போது இங்கு பல பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் பல பிரச்சினைகள் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார் .
மேலும் இங்கு சோலார் சிஸ்டம் நிறுவப்படும் வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு பின்னர் பேலியகொட மீன் சந்தை வளாகத்தின் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதுடன் சந்தை வளாகத்திற்கு பெருமளவு வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மீன் சந்தை வளாகத்தின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துமாறும், மீன் சந்தை வளாகத்தின் சுகாதாரம் சீர்கெடாமல், நல்ல நிலையில் இருக்க அனுமதிக்குமாறும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டதுடன் வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய அமைச்சர், அவற்றை அகற்றுவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.