பாகிஸ்தானில் நாவஸ் ஷெரீப்பின் கட்சியும் பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றதோடு ஏனைய கட்சிகள் 42 இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில் மொத்தமாக உள்ள 264 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 133 இடங்கள் தேவை என்பதால் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இதே வேளை மேலும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் சுயேட்சை வேட்பாளர்களையே அல்லது சிறிய கட்சிகளையோ அவர்கள் இணைத்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.