72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன
இருப்பினும் நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளனர்.