மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கின்ற வேலைத்திட்டத்தை தவிர்த்து வேறு மாற்று வழிகள் காணப்படுமாயின் அது தொடர்பில் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்.
அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவு இல்லாத குழுக்கள், மக்கள் முன்பாக சென்று பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது வெறும் வார்த்தைகளால் முடியாது.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேடைகளில் சில குழுக்கள் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆட்சியில் பங்கேற்ற காலம் மிகக் குறைவு” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.