சீயான் விக்ரமின் 62 வது படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. தங்கலானுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை ஹெச் ஆர் பிலிம்ஸ் தயாரிக்க சித்தா படத்தை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார்.
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா குஷி, அன்பே ஆருயிரே , இசை, நியூ , கள்வனின் காதலி போன்ற படங்களை இயக்கி வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியிருந்தார்.
இருப்பினும் இவர் இயக்கிய படங்களை விட இவர் வில்லனாக அண்மை காலங்களில் நடித்து வந்த படங்கள் இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டது.
இந்நிலையில், விக்ரமின் 62 வது படத்தில் எஸ்ஜே.சூர்யா இணையவுள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது.