ஏமனின் தெற்கே லாஜ் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை சுமார் 4.31 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.