வவுனியா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பொதுக் கட்டிடமொன்றே, செட்டிகுளம், பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு மக்களின் பொருளாதார விருத்திக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதி வாழ் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், கிராம அலுவலர் அஸ்லம், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், காந்திநகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், காந்தி நகர் மகளிர் அபிவிருத்திச் சங்கத்தினர், யுஎன்டிபி நிறுவனத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.