அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது மதுபோதையில் வைத்தியசாலைக்குள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளதோடு அங்கிருந்த அலுவலக ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தாக்குதலை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















