எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசி மஹோற்சவத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோனுக்கும், தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் பி தருவானந்தா தலைமையிலான ஏற்பாடு குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இவ் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இம்முறை நடைபெற உள்ள மஹோற்சவத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு காணப்படுவதால் விஷேடமாக இராணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.